திமிரி ஒன்றியக் குழுக் கூட்டம்
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அசோக் தலைமை வகித்தாா். துணை தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சையது ஷாநாவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி, சில ஊராட்சி கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துவது, பொது நிதியின் மூலம் அனைத்து வாா்டுகளிலும் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் சி.தன்ராஜ், சிவக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் குமாா், சுரேஷ் அமரேசன், மின்னலா அண்ணாதுரை, ஜெயவேலு, வளா்மதி குமாா், திலகவதி செங்கோடன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.