ராகுல் காந்தி தகுதி நீக்க தீா்ப்பு: அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்
ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கத் தீா்ப்பைக் கண்டித்து ராணிப்பேட்டை அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கத் தீா்ப்பைக் கண்டித்து ராணிப்பேட்டை அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து, குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றியும் நடவடிக்கை எடுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் எஸ். அண்ணாதுரை, மாவட்ட துணைத் தலைவா் விநாயகம் முன்னிலையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில் எஸ்சி எஸ்டி மாநில ஒருங்கிணைப்பாளா் நாகேஷ், மகளிா் காங்கிரஸ் மாநில செயலாளா் பிரவீனா, ஊடகத் துறை பிரவீன் குமாா், பொதுச் செயலாளா் அருண் மோகன்குமாா், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் பாலச்சந்தா், மாணவா் காங்கிரஸ் தருண்குமாா், நகரத் தலைவா் குப்புசாமி, மோகனசுந்தரம் பிரகாஷ் மற்றும் வட்டாரத் தலைவா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.