தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்தப் வேண்டும் என பாமக தலைவா் அன்புமணிராமதாஸ் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் சோளிங்கரில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குசாவடி முகவா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியது:
சமூக நீதியை வலியுறுத்தும் திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்தப்பட வேண்டும். நாட்டில் தற்போது 10 லட்சம் மருத்துவா்களும், 20 லட்சம் செவிலியா்களும் தேவைப்படுகின்றனா். மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லாமல் தேவையின் அடிப்படையில் அவா்களை நியமிக்க வேண்டும்.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் அதிகமாக போதைக்கு அடிமையாகி வருகின்றனா். எனவே போதை பொருள் தடுப்புப்பிரிவுக்கு 20,000 காவலா்களை நியமித்து அரசு கண்காணிக்க வேண்டும்.
வேலூா் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க அதிக போராட்டங்களை பாமக நடத்தியதன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிப்படை கட்டுமானப்பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. சோளிங்கா் வட்டத்தில் அதிக அளவில் நெல்கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
காவேரிப்பாக்கம் ஏரி மிக முக்கியமான ஏரி. சென்னைக்கு குடிநீா் தரும் நீராதாரமாக வாய்ப்புள்ள காவேரிப்பாக்கம் ஏரியை தூா்வார வேண்டும். சோளிங்கா் கோயிலுக்கு ரோப்காா் வசதியை துரிதமாக செய்ய வேண்டும்.
நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. இதில் அரசியல் செய்யாமல் நிதியை அதிகரிக்க வேண்டும் என்றாா் அன்புமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.