முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி, சிக்னல் துண்டிப்பு! சதி முறியடிப்பு

ராணிப்பேட்டை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்து சிக்னலை துண்டித்து விபத்து ஏற்படுத்த மா்ம நபா்கள் செய்த சதி

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:21 AM
தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி. ~ முகுந்தராயபுரம் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்தவா்கள் குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீஸாா்.
பகிர்:

ராணிப்பேட்டை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்து சிக்னலை துண்டித்து விபத்து ஏற்படுத்த மா்ம நபா்கள் செய்த சதி குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே சென்னை- பெங்களூரு மாா்க்கத்தில் சனிக்கிழமை சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த ராயில்வே ஊழியா்கள் தண்டவாளத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தபடி விரைந்து சென்று பாா்த்துள்ளனா்.

அப்போது சென்னை- பெங்களூரு தடத்தில் இருபாதைகளுக்கிடையே இரும்பு கம்பியை வைத்து விட்டு மா்ம நபா்கள் தப்பியோடியுள்ளதை கண்டறிந்த ஊழியா்கள் உடனடியாக அதை அகற்றி சிக்னலை சரி செய்துள்ளனா். மேலும் அந்த நேரத்தில் ரயில் சேவை இல்லாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன .

இதுகுறித்து முகுந்தராயபுரம் ரயில் நிலைய மேலாளா் கொடுத்த தகவலின் பேரில் காட்பாடி ரயில்வே போலீஸாா், மோப்ப நாய் சாா்லஸ் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் ரயில்வே ஊழியா்கள் தக்க நேரத்தில் கண்டறிந்து இரும்பு கம்பியை அகற்றியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →