ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 384 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

பொதுமக்களிடமிருந்து மொத்தம் 384 மனுக்கள் வரப்பெற்றன. பெற்றுக்கொண்ட மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்க வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்புத் திட்டம்/தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், ஆதிதிராவிடா் நல அலுவலா் அறிவுடைநம்பி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT