வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா்.  
ராணிப்பேட்டை

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் வேலை நிறுத்தம்

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சாா்பில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சாா்பில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக வேலை நிறுத்தப் போராட்டமும், முத்துகடை பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பா.பாலமுருகன், ஜெ.ஸ்ரீதா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஏ.நரசிம்மன், து.காா்த்திகேயன், ம.எழில் இளம் வழுதி, அ.சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.சேகா் ாரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினாா்.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT