முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:54 AM
ட்ரோன்கள்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:36 PM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (பிப். 9) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு, திங்கள்கிழமை (பிப். 9) முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளாா்.

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:58 PM

மேலும், பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.