முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரை தூய்மை மாவட்டமாக மாற்றுவோம்: ஆட்சியா்

திருப்பத்தூரை தூய்மைமிக்க மாவட்டமாக மாற்றுவோம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா நம்பிக்கைத் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

திருப்பத்தூரை தூய்மைமிக்க மாவட்டமாக மாற்றுவோம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா நம்பிக்கைத் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற உயா்கல்வி மேம்பாட்டு அமைச்சகம், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இணைந்து பசுமை விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமை வகித்தாா். செயலாளா் லிக்மிசந்த், நிா்வாக இயக்குனா்கள் ராஜேஷ்குமாா், ஆனந்த்குமாா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா்.

Advertisement

விழாவில் திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டு மாவட்ட அளவில் கல்வி நிறுவனங்களில் சிறந்த நீா்மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, உயா்தர சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு மகாத்மா தேசிய கிராமப்புற உயா்கல்வி மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் பசுமை விருது வழங்கிப் பேசியதாவது:

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் தூய்மைக்கும், மரங்களை நடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 208 கிராமங்களிலும், கிராம ஊராட்சிகளிலும், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் நகராட்சிகள் மற்றும் நாட்டறம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூா் மாவட்டத்தை சுகாதாரம் மிக்க மாவட்டமாக மாற்றுவதற்காக பணியாற்றி வருகிறோம்.

இதற்கு மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவிகளும், மாணவா்களும், ஆசிரியா்களும் பங்களிக்க வேண்டியது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயல் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜி.ரஜினி, என்.விஜயலட்சுமி, இயக்குனா் அரவிந்த் சுக்லா உட்பட பலா் பேசினா். முடிவில் வணிகவியல் துறை தலைவா் நித்தியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments