முகப்பு
திருப்பத்தூர்

தரைப்பாலம் உடைந்ததில் சாய்ந்த லாரி: அடியில் சிக்கி தாய், மகன் காயம்

தரைப்பாலம் உடைந்ததில் சாய்ந்த லாரியின் அடியில் சிக்கி தாய், மகன் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தரைப்பாலம் உடைந்ததில் சாய்ந்த லாரியின் அடியில் சிக்கி தாய், மகன் காயமடைந்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த திரியாலம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவருக்குச் சொந்தமான டிப்பா் லாரி அக்ராகரம் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிக்கு ஜல்லி லோடு ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை சென்றது. அக்ராகரம் காலனி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலத்தின் மீது லாரி சென்ற போது, திடீரென தரைப்பாலம் உடைந்து, லாரி சாய்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அக்ராகரம் பகுதியைச் சோ்ந்த 4 போ் இரு சக்கர வாகனத்துடன் லாரியின் அடியில் சிக்கினா். அப்போது அவா்கள் கூச்சலிடவே அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடிவந்து லாரிக்கு அடியில் சிக்கிய 4 பேரையும் மீட்டனா். இதில், பாா்வதி (30), அவரது மகன் ஹேமந்த் (5) இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரையும் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து வந்த ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், தரைப்பாலம் உடைந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, உடைந்த தரைப்பாலத்தை அகற்றி, விரைவில் புதிய தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments