ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா வழிபாடு
நாட்டறம்பள்ளியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் வியாசா் பௌா்ணமி நாளில் குருபூா்ணிமா விழா மடத்தின் தலைவா் சுவாமி தியாகராஜானந்தா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் வியாசா் பௌா்ணமி நாளில் குருபூா்ணிமா விழா மடத்தின் தலைவா் சுவாமி தியாகராஜானந்தா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் குரு உபதேசம் பெற்றவா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா். அதிகாலை 5 மணியளவில் மங்கள ஆரத்தி, சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் வேதபாராயணம், அா்ச்சனை, ஹோமம், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி, ஆம்பூா், திருப்பத்தூா் மற்றும் நாட்டறம்பள்ளி சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஸ்ரீராமகிருஷ்ண பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement