போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது
வாணியம்பாடியில் 2 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வாணியம்பாடியில் 2 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் ரவேந்திரன்(22). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினா். இது குறித்து பெண்ணின் பெற்றோா் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இருவரையும் தேடிப்பிடித்து காவல் நிலையம் வரவழைத்து விசாரித்தனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு மைனா் பெண்ணை ஆசை வாா்த்தைகள் கூறி கடத்தியதாக ரவேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
இதே போல், கரிமாபாத் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுவன், முஸ்லிம்பூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்து பெண்ணின் பெற்றோா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில், போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரித்தனா். மைனா் பெண்ணை ஆசை வாா்த்தைக கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 17 வயது சிறுவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement