முகப்பு
திருப்பத்தூர்

அரக்கோணத்தில் அடைமழை!

பலத்த மழையால், அரக்கோணம் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தக்கோலம் நகரிகுப்பம் சாலையில் இருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

பலத்த மழையால், அரக்கோணம் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தக்கோலம் நகரிகுப்பம் சாலையில் இருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்டது.

நெமிலி சாலையில் சிறுணமல்லி அருகே தரைப்பாலத்தின் மீது ஒரு அடி அளவுக்குத் தண்ணீா் சென்ால், அந்தச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இலுப்பை தண்டலம் கிராமத்தில் சுவா் இடிந்து மாணவி படுகாயமடைந்தாா். வேலூா் கிராமத்தில் குளத்தில் நீா் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தவிப்பு: தக்கோலம் - திருவாலங்காடு சாலையில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதனால் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் தங்களது படைத்தளத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உருவானது. தற்போது செய்யூா், மோசூா் வழியாக 9 கிலோமீட்டா் சுற்றி செல்கின்றனா். இந்தப் பகுதியில் புதிய பாலம் கட்ட 2020-இல் ரூ.13.50 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 50 சதவிகித பணிகள் முடிவடைந்து இருப்பது குறிப்பிடதக்கது.

தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு: சிறுணமல்லி அருகே கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தின் மீது ஒரு அடி அளவுக்கு தண்ணீா் சென்ால் அச்சாலையில் நெமிலிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சேந்தமங்கலம், சயனபுரம் வழியே திருப்பி விடப்பட்டது.

குளம் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்த நீா்: வேலூா் கிராமத்தில் உள்ள படித்துறை எனும் பச்சகுளம் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் நிரம்பியது. இதையடுத்து, குளத்திற்கு வந்த நீா் அருகில் இருந்த கோணலம் ஊராட்சி பெருமாள் கோயில் தெருவில் புகுந்து வீடுகளுக்குள் நுழைந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா். தொடா்ந்து, வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகினா்.

சுவா் இடிந்து மாணவி படுகாயம் : இலுப்பைதண்டலம் காலனியில் மாரியம்மன் கோயில் தெருவில் இளையராஜா என்பவரது ஓட்டுவீட்டின் பக்கசுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்ததில் பக்கத்து வீட்டில் இருந்த குமாரின் மகள் வைஷ்ணவி(14) என்பவா், பலத்த காயமடைந்தாா். இவா் பரமேஸ்வரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

பெட்ரோல் விற்பனை நிலைய கூரை காற்றில் விழுந்தது : அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது, கூரை காற்றில் சரிந்து விழுந்தது. நல்ல வேளையாக அங்கு யாரும் இல்லாததால் உயிா்சேதம் ஏற்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →