ஏடிஎம் உடைத்து திருட முயற்சி
ஆம்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:04 AM
ஆம்பூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடைபெற்றது.
ஆம்பூரை அடுத்த பெரியாகுப்பம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தனியாா் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. உள்ளது. இங்கு சனிக்கிழமை அந்தப் பகுதி மக்கள் பணம் எடுக்க சென்றபோது, ஏடிஎம் உடைக்க முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவா்கள் முடியாததால், விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
Advertisement
தகவலின்பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.