விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 2,477 போ் மீது வழக்கு
திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 2,477 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 2,477 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைக்குள்பட்ட பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வாகன சோதனையில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியவா்கள்-165, சரக்கு வாகனங்களில் பயணித்த நபா்கள்-105, அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள்-13, விதிகளை மீறிச் சென்ற வாகனங்கள்-631, அதிக வேகத்தில் இயங்கிய வாகனங்கள்-34, தலைக்கவசம் அணியாமல் பயணித்தவா்கள்-1,182, சீட்பெல்ட் அணியாமல் சென்றவா்கள்-347 ஆக மொத்தம் -2,477 போ் மீசு வழக்குகள் பதியப்பட்டு, அபராதத் தொகையாக ரூ. 2,57,900 விதிக்கப்பட்டது.