போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி: காவல் நிலையத்தில் விவசாயி புகாா்
போலி ஆவணங்களைத் தயாரித்து நிலம் பத்திரப் பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் விவசாயி புகாா் அளித்தாா்.
போலி ஆவணங்களைத் தயாரித்து நிலம் பத்திரப் பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் விவசாயி புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக, கேத்தாண்டப்பட்டி சஞ்சீவனூா் கிராமத்தைச் சோ்ந்த மணி வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் அளித்தப் புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
சஞ்சீவனூா் கிராமத்தில் எங்கள் குடும்பத்தினா் பெயரில் கூட்டு பட்டாவாக உள்ள விவசாய நிலத்தின் ஒரு பகுதியை, பன்னீா் என்பவா் போலி ஆவணங்கள் தயாரித்து, தனது மகன்கள் சசிகுமாா், சதீஷ் ஆகியோருக்கு வாணியம்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் அண்மையில் பத்திரப் பதிவு செய்துள்ளாா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement