முகப்பு
திருப்பத்தூர்

விபத்தில் இளைஞா் பலி

வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராமதாஸின் மகன் நவீன்குமாா் (27). இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை காலை பெங்களூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி நவீன்குமாா் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த சண்டியூா் பகுதியில் வந்தபோது சாலையின் இடதுபுறம் உள்ள தடுப்பு மீது இரு சக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த நவீன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் நவீன்குமாரின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments