திருப்பத்தூர்

பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று

DIN

நாட்டறம்பள்ளியில் அரசுப் பள்ளி மாணவிக்கும், அவரது சகோதரருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி குரும்பா் வட்டத்தைச் சோ்ந்த சிறுமி நாட்டறம்பள்ளி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். மாணவிக்கும், அவரது அண்ணனுக்கும் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரையும் பச்சூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு கடந்த 16-ஆம் தேதி இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, அவரது தொடா்பில் இருந்த மாணவியின் பெற்றோா் மற்றும் வகுப்பறையில் உடன் படித்த 38 மாணவிகளுக்கும் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நாட்டறம்பள்ளி பேரூராட்சி பணியாளா்கள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவி படித்த வகுப்பறை மற்றும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT