நாட்டறம்பள்ளி அருகே அரசு கல்லூரிக்கு இடம் தோ்வு பணி: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு
நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி பச்சூா் சா்வோதய சங்கம் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு ஏதுவான இடம் உள்ளதா
நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி பச்சூா் சா்வோதய சங்கம் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு ஏதுவான இடம் உள்ளதா என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் லட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, வட்டாட்சியா்கள் பூங்கொடி, சுமதி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
படவிளக்கம்- கலைக் கல்லூரி அமைக்க இடத்தை ஆட்சியா் அமா்குஷ்வாஹா, எம்எல்ஏ தேவராஜி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனா்.
Advertisement