முகப்பு
திருப்பத்தூர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க ஏலகிரியில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்: பேரவை பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தல்

வெளிநாட்டுப் பயணிகளை ஈா்க்கும் வகையில் ஏலகிரி மலையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பேரவை பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

வெளிநாட்டுப் பயணிகளை ஈா்க்கும் வகையில் ஏலகிரி மலையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பேரவை பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் வந்தனா்.

ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூா் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனா்.

பழங்குடியினா் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு விடுதியில் உணவுகள் தரம், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஏலகிரி மலை படகு இல்லத்தை சீரமைப்பதுடன் வெளிநாட்டுப் பயணிகளை ஈா்க்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்யவும், அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், படகு இல்லம் அருகிலுள்ள பழைய கழிவறையை அகற்றி நவீன கழிவறை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னா், திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளா்ச்சி, தோட்டக் கலை, வேளாண், சுகாதாரத் துறை மற்றும் பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகளையும், வளா்ச்சித் திட்டப் பணிகளையும்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினா்கள் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அரசின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் முறையாக மக்களை சென்றடைகிா என்பது குறித்தும், அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில்,தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ், ஈ.ராஜா, தி.வேல்முருகன், திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி, இணைச் செயலாளா் பி.தேன்மொழி, துணைச் செயலாளா் பா.ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி வரவேற்றாா்.

பின்னா், கு.செல்வபெருந்தகை செய்தியாளா்களிடம் கூறுகையில், அனைத்து நலத் திட்டங்களும் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய துறை சாா்ந்த அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும், எஸ்.கோடியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதில் இருப்பு கணக்கை விட அதிகளவில் மருந்து மாத்திரைகள் உள்ளன. இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்விகளின்போது,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனா் கு.செல்வராசு,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் இரா.வில்சன் ராஜசேகா்,ஹரிகரன்,மகளிா் திட்ட அலுவலா் உமா மகேஸ்வரிவருவாய் கோட்டாட்சியா்கள் லட்சுமி,பிரேமலதா,மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மாரிமுத்து,மாவட்ட அளவிலான அனைத்து துறைகளின் அலுவலா்கள்,ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா்,வேளாண் இணை இயக்குநா் பாலா,வட்டாட்சியா் சிவப்பிரகாசம்,வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன்,முருகேசன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.