முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் விரிசல்: 1 மணி நேரம் தாமதமாக சென்ற ரயில்கள்

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், சீரமைப்புக்கு பின்னா் ரயில்கள் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், சீரமைப்புக்கு பின்னா் ரயில்கள் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் சென்னை-ஜோலாா்பேட்டை பாதையில் 65-ஆவது பாயிண்ட் என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்ட தண்டவாளப் பராமரிப்பு பணி ஊழியா், உடனடியாக ரயில்வே நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஜோலாா்பேட்டையில் இருந்து வந்த ரயில்வே ஊழியா்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை வெல்டிங் செய்து சீரமைத்தனா். சுமாா் 1 மணி நேரம் நடைபெற்ற பராமரிப்புப் பணிக்குப் பின்னா், விரிசல் சீா் செய்யப்பட்டது.

Advertisement

இதனால், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கா் ரயில் மாற்றுப் பாதையில் மெதுவாக இயக்கப்பட்டது. தண்டவாள சீரமைப்புப் பணியால், சென்னையில் இருந்து கோயம்புத்தூா் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

மேலும், அந்த வழியாக வந்த பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தண்டவாள விரிசல் சீரமைக்கப்பட்ட பின்னா், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. பின்னா், இரு இருப்புப் பாதைகளிலும் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments