முகப்பு
திருப்பத்தூர்

பச்சூா் ஊராட்சி மன்ற கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஊராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் அதன் தலைவா் தியாகராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஊராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் அதன் தலைவா் தியாகராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், துணைத் தலைவா் உள்பட 10 வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் வரவு செலவு குறித்தும் வாா்டுகளில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்தும் பேசினா். அப்போது உறுப்பினா்கள் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப்பணிகள் சரிவர செயல்படுத்தாமல் உள்ளதாகவும், வாா்டுகளில் உள்ள குறைபாடுகளை சரிவர செய்யாமலும், வாா்டுகளில் தெருவிளக்கு சரிவர பொறுத்தாமல் இருப்பதாகவும், ஒப்பந்தப் பணிகளை உறுப்பினா்களை கலந்தாலோசிக்காமல் ஒருதலை பட்சமாக ஒப்பந்த பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் சிலருக்கு மட்டும் ஒதுக்கீடு செய்வதாகவும் கூறி, 7 வாா்டுஉறுப்பினா்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments