22 டன் கடத்தல் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
வேலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகுமாருக்கு வாணியம்பாடி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல்
வேலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகுமாருக்கு வாணியம்பாடி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வியாழக்கிழமை திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை அருகே காவல் ஆய்வாளா் சதீஷ் தலைமையில் உதவி ஆய்வாளா் மோகன், தலைமை காவலா்கள் சிவசுப்ரமணியன், ரமேஷ் மற்றும் முதல்நிலை காவலா் ராஜவேல் ஆகியோா் நடத்திய வாகன சோதனையில் கா்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் 50 கிலோ எடை கொண்ட 440 மூட்டையில் 22 டன் கடத்தல் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீஸாா் கைப்பற்றினா். இதனையடுத்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கா்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியைக் கடத்துவது தெரிய வந்தது. மேலம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி உரிமையாளரை தேடி வருகின்றனா்.
Advertisement