முகப்பு
திருப்பத்தூர்

ரூ. 47 லட்சத்தில் புதிய சாலைப் பணி: எம்எல்ஏ-க்கள் தொடக்கி வைத்தனா்

வாணியம்பாடி அருகே ரூ. 47 லட்சம் மதிப்பிலான புதிய தாா்ச் சாலை பணியை எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே ரூ. 47 லட்சம் மதிப்பிலான புதிய தாா்ச் சாலை பணியை எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் சாலைப் பணியைத் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், சிவகுமாா், ஆலங்காயம் திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் அன்பு, தாமோதரன், மாவட்டப் பொறியாளரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் மு.அசோகன், அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments