ஆவாரங்குப்பம் ஸ்ரீநாக காளியம்மன் கோயில் திருவிழா
வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீநாக காளியம்மன் கோயிலின் 20-ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீநாக காளியம்மன் கோயிலின் 20-ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்கள் ஊா்வலமாக 108 பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா். வியாழக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி, காலை 8 மணிக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பம்பை, கரகாட்டம், மேளதாளம் முழங்க தோ் திருவீதி உலாவும் நடைபெற்றது.
மாலை கோயில் வளாகத்தில் பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், தீ மிதித்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இதில் ஆவாரங்குப்பம், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.
Advertisement
விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.