திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளைமுதல் சிறப்பு கடன் முகாம்கள்
திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 6) கடன் பெற சிறப்பு முகாம்கள் 6 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 6) கடன் பெற சிறப்பு முகாம்கள் 6 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்விக் கடன், விவசாய பயிா்க்கடன், தொழில் கடன் ஆகியவை பெற வட்டார அளவிலான சிறப்புக் கடன் முகாம் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்களிலும் நடைபெறுகிறது.
அதன் விவரம்: ஜூன் 6-ஆம் தேதி நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 7-ஆம் தேதி ஜோலாா்பேட்டை வட்டார வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 8-ஆம் தேதி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்திலும், 9-ஆம் தேதி கந்திலி வட்டார வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 10-ஆம் தேதி ஆலங்காயம் வட்டார வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 13-ஆம் தேதி ஆம்பூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்வோா் உரிய சான்றிதழ்களுடன் வரவேண்டும்.
முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று தகுதியானவா்களுக்கு கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.