முகப்பு
திருப்பத்தூர்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு பணி ஆணைகள்: ஆட்சியா் வழங்கினாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.75 கோடியிலான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.75 கோடியிலான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், ரூ.270.15 கோடியில் 9 பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்து, 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சேவைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.75 கோடிக்கான வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் குமரேஷ்வரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், உதவி பொறியாளா் முருகதாசன், தொழில்நுட்ப உதவியாளா் காா்த்திகேயன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.