முகப்பு
திருப்பத்தூர்

கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் கோழிப் பண்ணையில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை காலை கூத்தாண்டகுப்பத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு 27 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

Advertisement

மேலும், பதுக்கி வைத்தவா்கள் குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments