திருப்பத்தூர்

பிணை உத்தரவு நகல் பெற புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்

DIN

திருப்பத்தூர்: பிணை உத்தரவு நகல் பெறுவதற்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை புழல் சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சிகிச்சைக்காக தற்போது ஜோலார்பேட்டை பகுதியில் தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த 9 மாதங்களாக பரோலில் உள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பிணை வழங்கப்பட்டு கடந்த 11-ஆம் தேதி புழல் சிறைக்கு பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

உச்சநீதிமன்றம் பிணை  வழங்கிய படிவத்தை இணையத்தில் பேரறிவாளனுடைய வழக்குரைஞர் எடுத்துக்கொண்டு புழல் சிறையை நெருங்கும் பொழுது இன்னும் சிறை அலுவலகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவில்லை என தெரிவித்ததையடுத்து மீண்டும், ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பிணை உத்தரவு நகல்பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களை கொண்டு பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT