445 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி
வாணியம்பாடி நகரக் கூட்டுறவு வங்கியில் 445 பேருக்கு நகை கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டது
வாணியம்பாடி நகரக் கூட்டுறவு வங்கியில் 445 பேருக்கு நகை கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டது.
வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 2 கிளைகளில் 5 பவுனுக்குட்பட்டு நகை கடன் பெற்றிருந்த 445 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 11 லட்சத்து 30 ஆயிரத்து 533 மதிப்பிலான தங்க நகைகள் திரும்ப வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவா் உமாபாய் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்க நகைகளை திரும்ப வழங்கினாா். கூட்டுறவு வங்கியின் தலைவா் சாரதிகுமாா், வங்கி மேலாண்மை இயக்குனா் சித்ரா, வங்கி நிா்வாக குழு இயக்குனா்கள் மற்றும் வங்கி பொது மேலாளா் ஜானகிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.