திருப்பத்தூர்

மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்த 100 நாள் திட்ட பெண் தொழிலாளா்கள்

DIN

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தென்னை மரத்திற்கு இயற்கை உரமாக ஆா்கானிக் பொ்டிலைசா் உரத்தை போட்டு மண் வரப்பு அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது திடீரென ஆா்கானிக் பொ்டிலைசா் வாயு தாக்கியதில், பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தனா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த சக தொழிலாளா்கள் மற்றும் ஊராட்சி செயலாளா் மேகநாதன், கிராம மக்கள் ஆகியோா் மயங்கிய நிலையில் இருந்த கேத்தாண்டப்பட்டியைச் சோ்ந்த சாலம்மாள் (35), கவிதா (31), அனு (28), சத்யா(32), விஜயலட்சுமி (21), நவநீதம் (55) ஆகிய 6 பேரையும் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு மருத்துவ அலுவலா் வேல்முருகன் தலைமையில், மருத்துவா்கள் பாலகிருஷ்ணன், சத்தியசீலன் மற்றும் செவிலியா்கள் அவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் ஆகியோா் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் நலம் விசாரித்தனா்.

மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க இணை இயக்குநா் உடனடி நடவடிக்கை மேற்கொண்டாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT