முகப்பு
திருப்பத்தூர்

புற்றுமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 13 லட்சம்

புற்றுமாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 13 லட்சத்து 79 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

புற்றுமாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ. 13 லட்சத்து 79 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த புற்றுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தினமும் ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசித்து தங்களின் நோ்த்திக் கடனைச் செலுத்துகின்றனா்.

இந்தக் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைப் பணம் எண்ணப்பட்டதில், ரூ. 13 லட்சத்து 79 ஆயிரத்து 893 ரொக்கம், 131 கிராம தங்கம், 143 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

Advertisement

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வேலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நித்யா தலைமையில், வாணியம்பாடி சரக ஆய்வா் ரவிக்குமாா், செயல் அலுவலா் சண்முகம் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதனிடையே, புற்றுமாரியம்மன் கோயில் பகுதியில் பழுதான கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டும். கோயில் பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments