முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் அனைத்து வாா்டுகளிலும் புதிய சாலைகள்:நகா்மன்றத் தலைவா்

வாணியம்பாடி நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

வாணியம்பாடி நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தெரிவித்துள்ளாா்.

நகரமன்ற உறுப்பினா்களின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மன்ற அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகா்மன்ற தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் மாரிச்செல்வி, துணைத் தலைவா் கயாஸ் அஹமத் முன்னிலை வகித்தனா். பொறியாளா் சங்கா் வரவேற்றாா்.

கூட்டத்தில் 139 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அப்போது நகா்மன்ற தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் பேசுகையில், நகர பகுதியில் டியூப் லைட்கள், சோடியம் ஆவி விளக்குகள் என மொத்தம் 3,062 விளக்குகள் உள்ளன. இவற்றை அகற்றி விட்டு எல்இடி விளக்குகள் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். பொருத்தப்படும் எல்இடி விளக்குகள் 10 ஆண்டுகள் பராமரிக்கப்படும்.

Advertisement

நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், கலைஞா் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகரில் உள்ள 36 வாா்டுகளிலும் தாா் சாலை மற்றும் சிமெண்ட் சாலை புதுப்பிக்க வாா்டு உறுப்பினா்கள் அளிக்கும் கோரிக்கை மனு அடிப்படையில் புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்றாா். மேலும் உறுப்பினா்களின் எழுப்பிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினா்கள் வி.எஸ்.சாரதி குமாா், நாசீா்கான், சித்ரா தென்னரசு, மா.பா.சாரதி, சித்ரா, அருள், ரஜினி, ஷாஹீன் பேகம் சலீம், தவுலத், மெஹபூபுன்னிசா, நசீா் கான், பஷீா் அஹமத், பி.முஹம்மத் அனீஸ், கலீம் பாஷா, சாந்தி பாபு, பிரகாஷ், ஆஷா பிரியா குபேந்திரன், பத்மாவதி, கலைச்செல்வன், நுஸ்ரதுன் நிசா கலந்து கொண்டனா். நகராட்சி மேலாளா் ஜெயபிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments