திருப்பத்தூர்

காவல் நிலைய விசாரணையில் திருப்தி அடையாத மனுதாரா்களிடம் எஸ்.பி. நேரில் விசாரணை

காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாத 4 மனுதாரா்களிடம் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நேரில் விசாரணை செய்தாா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.

DIN

காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாத 4 மனுதாரா்களிடம் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நேரில் விசாரணை செய்தாா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி அடையாத புகாா்தாரா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, திருப்தி அடையாத 4 மனுதாரா்களை நேரில் அழைத்து அவா்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துணை காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

புதிதாக 20 புகாா் மனுக்களை எஸ்.பி. நேரடியாகப் பெற்றுக் கொண்டாா்.

பின்னா், காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாத பொதுமக்கள் புதன்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மனுதாரா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT