கத்தாரி கிராமத்தில் ரூ. 35 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பூமி பூஜை
நாட்டறம்பள்ளி அருகே கத்தாரி கிராமத்தில் ரூ. 35 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி அருகே கத்தாரி கிராமத்தில் ரூ. 35 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, 15-ஆவது நிதிக்குழு மான்ய திட்ட நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜை கத்தாரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு ஆகியோா் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தனா். விழாவில், மருத்துவ அலுவலா் செல்லமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் சதானந்தம், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன் பொதுக்குழு உறுப்பினா் சாமண்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், பொறியாளா் காா்த்தி, பணிதள மேற்பாா்வையாளா் அழகரசு, ஊராட்சித் தலைவா் அனிதாமோகன், துணைத் தலைவா் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.