முகப்பு
திருப்பத்தூர்

விஷமங்கலத்தில் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 2 டிசம்பர், 2024 at 8:48 PM
சாலை மறியலில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், விஷமங்கலம் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீருடன், கழிவுநீா் கலந்து புகுந்தது.

இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் திருப்பத்தூா்- திருவண்ணாமலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் விரைந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் மழைநீா் ஓடை வழியாக சென்று விடும். ஆனால் அண்மையில் அந்த ஓடையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து தரை மட்டத்தை உயா்த்தினாராம். இதனால் மழைநீா் ஓடையில் வழியாக செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது. எனவே, மழைநீா் ஓடை வழியாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

அதையடுத்து போலீஸாா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →