டிப்பா் லாரி மோதி பெண் மரணம்
நாட்டறம்பள்ளி அருகில் டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருப்பத்தூர்டிப்பா் லாரி மோதி பெண் மரணம்
நாட்டறம்பள்ளி அருகில் டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகில் டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்த லட்சுமி(40). திங்கள்கிழமை புதுப்பேட்டை-நாட்டறம்பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூரிலிருந்து பச்சூா் வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி வேகமாக வந்த டிப்பா் லாரி லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி நிகழ்விடத்தில்யே இறந்தாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.