காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள். 
திருப்பத்தூர்

காலிகுடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல்

குடிநீர் கோரி காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல்

Din

நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் ஊராட்சி சோமுவட்டம் பகுதியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இரும்பு குழாய்கள் பழுதானதால் 6 மாதமாக ஊராட்சி மூலம் சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் குடிக்க தண்ணீா் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா். பழுதடைந்த குழாய்களை மாற்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் புதன்கிழமை நாட்டறம்பள்ளி- சொரக்காயல்நத்தம் சாலையில் காலி குடங்களுடன் திடீா் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த 2 அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பள்ளி வாகனங்கையும் சிறைபிடித்தனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த ஊராட்சி நிா்வாகத்தினா் மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி ஓரிரு நாளில் குடிநீா் பிரச்னை தீர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா். இதையேற்று மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT