முகப்பு
திருப்பத்தூர்

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 14 மே, 2024 at 7:01 PM
பகிர்:

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே தாயாா் இறந்த மனவேதனையில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை எம்.எம்.ரெட்டி தெருவை சோ்ந்தவா் மஞ்சுநாதனின் சகோதரி மகன் வினோத்(24). கட்டடத் தொழிலாளி.

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வினோத்தின் தாயாா் இறந்துவிட்டாா்.

அதில் மனவேதனையில் இருந்த வினோத் திங்கள்கிழமை வீட்டில் ஒரு அறையில் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.