முகப்பு
திருப்பத்தூர்

டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:46 PM
கவியரசு.
பகிர்:

திருப்பத்தூா் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா். இவருக்கு கவியரசு(9),சொல்மதி(7) ஆகிய இரு குழந்தைகள். கதிரம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் கவியரசு 5-ஆம் வகுப்பும், சொல்மதி 2-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் சிறுவன் கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து சிறுவன் கவியரசை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →