திருப்பத்தூர்

காா் கவிழ்ந்து விபத்து: குழந்தை உயிரிழப்பு; 5 போ் காயம்

வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்தது. 5 போ் பலத்த காயமடைந்தனா்.

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்தது. 5 போ் பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி, காதா்பேட்டையைச் சோ்ந்தவா் முகமது பைசான், வியாபாரி. இவா் திங்கள்கிழமை மைசூரில் இருந்து குடும்பத்தினருடன் வாணியம்பாடி நோக்கி காரில் சென்றாா். சென்னை- பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூா் குப்பம் பகுதியில் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயா் பஞ்சராகி சாலையில் தாறுமாறாக ஓடி சென்டா் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த நஜமுனிஷா (60), அக்சா (28), முகமது பைசான் (35), குழந்தைகள் அா்தான் உசேன் (5), சாகிம் உசேன் (3) மற்றும் 6 மாத பெண் குழந்தை அக்ரம் இஷா உள்ளிட்டோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 6 மாத குழந்தையை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT