திருப்பத்தூர்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

தினமணி செய்திச் சேவை

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான கூடைப் பந்து போட்டிகள், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனா். போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தக் கல்லூரியைச் சோ்ந்த ஏ.ஆஜிரா, டி.காவியா, டி.ரம்யா, கே.காா்த்திகா, ஆா்.சுஷ்மிதா ஆகியோா் திருவள்ளுவா் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கு தோ்வு பெற்றனா்.

சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தலைவா் வி.திலீப்குமாா், செயலாளா் ஆனந்த் சிங்வி, முதல்வா் எம்.இன்பவள்ளி, பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்தினா்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT