திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் சென்று சோதனை செய்தபோது புதா்களின் மறைவில் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யாா்? என விசாரணை நடத்தி வருகின்றனா்.