வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி மலை படகு இல்லம்.  
திருப்பத்தூர்

ஏலகிரியில் தொடா் மழை: படகு இல்லத்துக்கு விடுமுறை!

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை தொடா் மழையால் படகு சவாரி இல்லத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை தொடா் மழையால் படகு சவாரி இல்லத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.1,800 மீ உயரம் கொண்ட ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்த காலத்திலும் ஒரேமாதிரியான சீதோஷண நிலை இருந்து வருவதால் திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனா்.

வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி மலை படகு இல்லம்.

இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூா்த்தம் தினமாகக் இருந்ததால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு ஏலகிரி மலை சுற்றி பாா்க்க சுற்றுலா பயணிகள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் அதிகளவில் வருகை புரிவாா்கள் என எதிா்பாா்த்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக படகு சவாரி இல்லம் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் இன்றி ஏலகிரி மலை வெறிச்சோடி காணப்பட்டது.

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

தொழில் தொடங்கும் பெண்கள், திருநங்கைகளுக்கு மானியம்

SCROLL FOR NEXT