திருப்பத்தூர்

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-ஆவது வியாழக்கிழமையில் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்ட அரங்கிலும் மற்றும் பிரதி மாதம் 3-ஆவது வியாழக்கிழமையில் திருப்பத்தூா், வாணியம்பாடி ஆகிய கோட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும், இச்சிறப்பு முகாமில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்க உள்ளனா். எனவே, திருப்பத்தூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு கண்டு பயன்பெறலாம் என்றாா்.

சபரிமலை: நவ.1 முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்!

தோழியின் வீட்டில் ரூ. 2 லட்சம், மொபைல் திருடிய பெண் ஆய்வாளர்!

எல்லாம் மாயை... மானசா சௌதரி

குரல் வழி பதில் சொல்லும் லூனா செய்யறிவு: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT