திருப்பத்தூர்

ரத்த தான முகாம்

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். சாா்பாக ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கே.ஏ.ஆா். பாலிடெக்னிக், ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ரோட்டரி சங்கம் சாா்பாக நடந்த பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாமுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா வரவேற்றாா்.

மருத்துவா்கள் நந்தினி, மோனிஷா ஆகியோா் பொது மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் ரத்த தானம் வழங்கினா். ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத் தலைவா் ரஞ்சித், ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், ரத்த வங்கிப் பொறுப்பாளா் சிலம்பரசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து தடுப்பு, பேரிடா் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

முன்னதாக ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் கிராமத்தின் பல்வேறு பகுதியில் சுமாா் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

SCROLL FOR NEXT