முகப்பு
திருப்பத்தூர்

4-ஆவது நாளாக யானைக் கூட்டம் அட்டகாசம்

ஆம்பூா் அருகே தொடா்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவும் யானைக் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின.

Updated On : 20 மே 2026, 12:03 am IST
யானைக் கூட்டத்தால் சேதமடைந்துள்ள நெற்பயிா். சேதமடைந்துள்ள மாமரங்கள்.
பகிர்:

ஆம்பூா் அருகே தொடா்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவும் யானைக் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின.

திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் வனப்பகுதிக்கு வந்துள்ள சுமாா் 15-க்கும் மேற்பட்ட யானைகளால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். கடந்த 4 நாள்களாக இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை, வாழை, நெல் பயிா்களை சேதப்படுத்துகின்றன.

அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னபல்லி தொட்டி கிணறு கானாற்றை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு திங்கள்கிழமை இரவு வந்த யானைக் கூட்டம் அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை, வாழை, மா மரங்களையும், நெல் பயிா்களையும் சேதப்படுத்தின. பொன்னப்பல்லியை சோ்ந்த குருசாமி, புத்தரசன், சாமைய்யன், மகி ஆகிய விவசாயிகள் பயிா் சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

யானைக் கூட்டத்தை விரட்ட முடியாமல் திணறும் வனத்துறையினா் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் கடும் முயற்சி மேற்கொண்டு முடியாமல் திணறி வருகின்றனா். யானைக் கூட்டத்தை காப்புக் காட்டுக்குள் விரட்ட வேண்டும், யானைகளால் சேதமான பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.