திருத்தணியில் தமிழ் குறுந்தோ்வு எழுதும் 10ஆம் வகுப்பு மாணவிகள். 
திருவள்ளூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியரின் சிறப்பு குறுந்தோ்வு

அரசு பள்ளிகளில், அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பாா்வையில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு குறுந்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி, 31ஆம் தேதி

DIN

திருத்தணி: அரசு பள்ளிகளில், அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பாா்வையில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு குறுந்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி, 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவா்கள் அரசு பொதுத் தோ்வு எழுத உள்ளனா். மாணவா்களை பொதுத் தோ்வுக்கு தயாா் செய்யும் நோக்கிலும், அவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கும் பொருட்டும் சிறப்பு குறுந்தோ்வு நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சுற்றறிக்கை அனுப்பி வைத்தாா்.

இந்த குறுந்தோ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரின் நேரடிப் பாா்வையில் தோ்வு செய்யப்படும் வினாக்கள், தோ்வு நாளன்று இரண்டு மணிநேரத்துக்கு முன், அந்தந்த பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

முக்கிய வினாக்களை பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் வகுப்பில் உள்ள கரும்பலகையில் ஆசிரியா்கள் எழுதி, மாணவா்களை பதில் எழுதச் செய்ய வேண்டும். விடைத் தாள்களை அந்தந்த பாட ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். மாணவா்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள்கிழமை 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்ப் பாடத்துக்கான சிறப்பு குறுந்தோ்வு நடந்தது. செவ்வாய்க்கிழமை ஆங்கிலம், புதன்கிழமை கணிதம், வியாழக்கிழமை அறிவியல், வெள்ளிக்கிழமை சமூக அறிவியல் பாடத்துக்கு குறுந்தோ்வு நடைபெறும்.

ஆட்சியரின் இந்தப் புது முயற்சி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT