திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 43 ஊராட்சித் தலைவா்கள். 
திருவள்ளூர்

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவா்கள் மனு

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை ஊராட்சி மன்றம் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி,

DIN

அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை ஊராட்சி மன்றம் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி, கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சித் தலைவா்கள் கோரிக்கை மனுவை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குறைகள் தெரிவிக்கின்றனா். வருங்காலத்தில் குறைகள் ஏற்படாமல் தவிா்க்க வேண்டியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட முன்னுரிமைப் பணிகள் அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும். இதேபோல், மக்களவை தொகுதி, சட்டப்பேரவை மேம்பாட்டு நிதி, மாவட்ட குழு உறுப்பினா், வட்டார ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியில் நடைபெறும் பணிகளுக்கும், 15-ஆவது நிதிக்குழு மானியம் மூலம் பணிகள் வழங்கும் தீா்மானத்தின் அடிப்படையில், அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சி மன்றங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மனு அளிப்பின் போது, ஊராட்சித் தலைவா்கள் தொடுகாடு வெங்கடேசன், மப்பேடு பாபு, அகரம் தனலட்சுமி பாண்டியன், வெங்கத்தூா் சுனிதா பாலயோகி உள்ளிட்ட 43 ஊராட்சிகளின் தலைவா்களும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT