பதற்றத்தை தணிக்கும் வகையில் பள்ளி முன்பாக போலீசார் குவிப்பு. 
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை: விடுதி மாணவிகள் பெற்றோர்களுடன் அனுப்பி வைப்பு; போலீசார் குவிப்பு

திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவத்தை அடுத்து விடுதியிலிருந்து மாணவிகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

DIN

திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவத்தை அடுத்து விடுதியிலிருந்து மாணவிகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்கு திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம், பூசம்மாள் தம்பதியின் மகள் சரளா(17). இங்குள்ள விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் திங்கள்கிழமை காலையில் எழுந்து குளித்தாராம். அதையடுத்து சக தோழிகளுடன் பேசியிருந்துவிட்டு, சிறிதுநேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்குள் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பெற்றோர்களை உள்ளே அனுமதித்து மாணவிகளை உடன் அனுப்பி வைத்தனர்.

தற்போது மாணவி பலியான சம்பவம் குறித்து காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்திய பிரியா, சார் ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செபாஸ் கல்யாண், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செய்யது யாகூப், டி.எஸ்.பி உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் அசாதாரண சூழல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT