திருவள்ளூர்

குறைதீா் கூட்டம்: ரூ.5.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு மானியமாக ரூ.5 லட்சம், சுயதொழில் மானியமாக மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழ

DIN

மக்கள் குறைதீா் கூட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு மானியமாக ரூ.5 லட்சம், சுயதொழில் மானியமாக மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 296 மனுக்கள் வரை பெறப்பட்டன.

அதையடுத்து, ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணியில் 100 % பூா்த்தி செய்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவொற்றியூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணியைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா், சத்துணவு பணியின்போது இறந்த 2 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை வழங்கினாா். ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் மூலம், சுய தொழில்புரிய மாற்றுத்திறனாளிக்கு மானியமாக ரூ. 50,000, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு தொடக்க மானியமாக ரூ.5 லட்சத்தை அந்த நிறுவன பிரதிநிதிகளிடம் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், கூடுதல் ஆட்சியா் ரிஷப், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT